ஆக்லாந்து: எலும்புகளுக்கு வலுவூட்ட உட்கொள்ளப்படும் கால்சியம் மாத்திரைகளால் மாரடைப்புக்கான வாய்ப்புக்கள் அதிகமாவதாக தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அயன் ரெய்ட் தலைமையிலான குழுவினர் சுமார் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
கால்சியம் மருந்துகள் உண்போருக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்டோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கால்சியம் மருந்துகளை உட்கொண்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகில் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
ரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாகும்போது ரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனையே மாரடைப்பு அதிகரிக்க காரணமாவதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மருத்துகளால் ரத்தத்தில் கால்சியம் அளவு மிகவும் அதிகரிப்பதால் அதைத் தடுக்க கால்சியம் அதிகமுள்ள உணவை அருந்துவதே எலும்புப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறது இந்தக் குழு.
ஆனால், இதை இதயவியல் நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். கால்சியத்தால் மாரடைப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. இது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தியே எந்த முடிவுக்கும் வர வேண்டும் என்கின்றனர்.
Saturday, July 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment