Wednesday, May 26, 2010

சாராயத்தில் கருகிய ஈரலின் படங்கள்.

சாராயம் மனித உடலின் ஏராளமான பாகங்களை பாதித்தாலும், அது பிரதானமாக பாதிப்பது ஈரலை.

ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது



இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.

சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.

அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.



குடியால் பாதிக்கப்பட்ட ஒரு ஈரலும் பாதிக்கப்படாத ஒரு ஈரலும்


ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் , என்பதும் குடிக்கத்தொடங்கிய ஒருவர் அதற்கு அடிமை ஆகுவிடுவாரா அல்லது இடையில் குடியை விட்டு விடுவாரா என்பது அவரின் உடலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று .
அல்ககோல் தீகைட்ரநேஸ் (alcohol dehyrdranase ) என்ற நொதியம்தான் சாராயாத்தை சமிபாடு அடையச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுவது, இந்த நொதியம் அதிகம் உள்ளவர்கள் அதிகம் குடிக்கும் போதே அவர்கள் எதிர்பார்க்கும் போதை அடைவார்கள் ,நொதியம் குறைவாக இருப்பவர்கள் குறைவாகத்தான் குடிக்க முடியும் .

மற்றும் தொடர்ச்சியாக குடிக்கும் ஒருவரில் இந்த நொதியம் பழக்கப் பட்டு போவதால் நாளுக்கு நாள் அவர் குடிக்கும் அளவும் அதிகரித்துக் கொண்டே போகும்.



சிரோசிஸ் ஏற்பட்ட ஒரு ஈரல்



அதைப் போல் ஒருவர் மதுவுக்கு அடிமை ஆவதும் , அதை இடையில் விட்டு விடுவதும் நம் மனத்துக்கு அப்பால் பரம்பரை(gene) அலகுகளாலும் தீர்மானிக்கப் படுகிறது.
கவனம் உங்கள் பரம்பரை (gene) அழகின் படி நீங்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகும் தன்மை கொண்ட பரம்பரை அலகைக் கொண்டவர் எனில் உங்கலாளால் கடைசி வரை குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமலேயே போய் விடலாம்.

அதை போல் சும்மா ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து பார் , எதையும் அனுபவித்து வைக்க வேண்டும் என்று யாரையும் குடிக்கத் தூண்டாதீர்கள். பிறகு உங்களால் கூட நிறுத்த முடியாத குடி காரர்கள் ஆகிப் போகலாம் அவர்கள்.

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (அல்குர்ஆன் 2:219)

No comments:

Post a Comment