கண்டங்கத்திரி, தூதுவளை, திப்பிலி இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்து வர தீராத சளியும், இருமலும் மாயமாய் மறையும்.
ஆஸ்துமாவிற்கும் கண்டங்கத்திரி நல்ல மருந்தாக அமைகிறது. கண்டங்கத்திரி, தூதுவளை இலைகளை காய வைத்து, அதனுடன் சிற்றரத்தை, மிளகு, அதிமதுரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
அதில் ஒரு கிராம் எடுத்து காலை, மாலை இருவேளையும் தேனில் கலந்து உட்கொண்டு வர ஆஸ்துமா கட்டுப்படும்.
கண்டங்கத்திரியை நன்கு இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு நீர்சுண்டும் படி காய்ச்சவும். அதை உடலில் பூசி குளித்து வர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
கண்டங்கத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், பேராமுட்டி வேர், சுக்கு அனைத்தையும் சம அளவு எடுத்து கஷாயமாக்கி குடித்து வர சுரம், கை, கால் வலி, வாதப்பிடிப்பு குணமாகும்.
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment