வாழைத் தண்டின் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நாம் பலருக்கும் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல மகத்துவங்களைக் கொண்டிருக்கிறது வாழைத் தண்டு.
பொதுவாக நாம் வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரகக் கற்களைக் கறைக்க வாழைத் தண்டு சாறெடுத்து அருந்துவார்கள்.
வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.
சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.
வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகும்.
நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment