மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியிட ஓசையால் கேட்புத் திறன் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தங்களது கேட்புத் திறன் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் கோரிப் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் நம் நாட்டில் ஒலியானது வேலையின் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது. அதன் விளைவாகத் தொழிலாளர்கள் அவதிப்படவும் நேர்கிறது.
அதிக ஒலி, செவித் திறனைப் பாதிப்பதோடு, தூக்கத்தையும் கெடுக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் ஒலி அளவு 35 டெசிபலுக்கு மேல் கூடும் போது ஆழ்ந்து உறக்கம் என்பது இல்லாமல் போகிறது.
தொடர்ச்சியான இரைச்சல் அதிக ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும்.
பணியிடங்களில் இரைச்சல், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் வசிப்பது போன்றவையும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கிறது என்பதை உணர வேண்டும்.
Tuesday, April 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment